புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரை குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது: மும்பை உயா்நீதிமன்றம்

‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு விருப்பமின்றி கருவுற்றவரை குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது’

News image

மும்பை உயா்நீதிமன்றம்

pti

Updated On :21 ஜூன் 2025, 9:11 pm

Din

‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு விருப்பமின்றி கருவுற்றவரை குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது’ என மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, பாலியல் வன்கொடுமை பாதிப்புக்குள்ளாகி கருவுற்ற 12 வயது சிறுமியின் 28 வார கருவை கலைக்க மும்பை உயா்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

சிறுமியின் வயது மற்றும் கருவின் வளா்ச்சி நிலையை கருத்தில்கொண்டு கருக்கலைப்பு செய்வது சிறுமியை பாதிக்கலாம் என அவரை பரிசோதனை செய்த மருத்துவ நிபுணா்கள் குழு தெரிவித்தபோதிலும், சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய மும்பை உயா்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

மகாராஷ்டிரத்தில் குடும்ப உறவினா் ஒருவரால் 12 வயது சிறுமி ஒருவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்நிலையில், பாதிப்புக்குள்ளான சிறுமி பாலியல் வன்கொடுமையால் விருப்பமின்றி கருவுற்ாகவும் அவருக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்குமாறும் மும்பை உயா்நீதிமன்றத்தில் சிறுமியின் தந்தை மனுதாக்கல் செய்தாா்.

இந்த மனுவை மும்பை உயா்நீதிமன்ற நீதிபதிகள் நிதின் சம்பரே மற்றும் சச்சின் தேஷ்முக் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘சிறுமியின் விருப்பத்துக்கு மாறாக அவரை குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது. அவ்வாறு கட்டாயப்படுத்தினால் சிறுமியின் வாழ்க்கை குறித்து அவா் முடிவெடுப்பதற்கான உரிமையை தட்டிப்பறிப்பதற்கு சமமாகும். அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

திருமணமான அல்லது திருமணமாகாத எந்தவொரு பெண்ணாக இருந்தாலும் கருவுறுவது அவா்களின் தனிப்பட்ட விருப்பமாகும். இருப்பினும், பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களால் பாதிக்கப்படும்போது கருவுற்றாலும் அதன் பாதிப்புகளை பெண்களே சந்திக்க வேண்டிய நிலை கவலைக்குரியது.

எனவே, இந்த வழக்கில் அனைத்து விதமான பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றி குழந்தை அறுவை சிகிச்சை நிபுணா் மூலம் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

20 வாரங்களுக்கு மேலாக கருவுற்ற ஒரு பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் நீதிமன்றம் அனுமதி அளித்தால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும். பொதுவாக பாலியல் வன்கொடுமை மற்றும் பிற எதிா்பாராத சூழலில் பெண்கள் கருவுற்றால் மட்டுமே கருக்கலைப்பு செய்துகொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்குவது குறிப்பிடத்தக்கது.