வாட்ஸ்ஆப் உரையாடல்கள் அடிப்படையில் விவாகரத்து கோரிய வழக்கில் மனைவியின் வாக்குமூலம் பெறமால் நாசிக் மாவட்ட குடும்ப நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பை மும்பை உயா்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மனைவியிடம் விவாகரத்து கோரி நாசிக் மாவட்ட குடும்ப நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த கணவா், அதற்கு சாட்சியமாக வாட்ஸ்ஆப்பில் மனைவி அனுப்பிய குறுஞ்செய்திகளை சமா்ப்பித்தாா்.
அந்தக் குறுஞ்செய்தியில் நாசிக்கிலிருந்து புணே பகுதிக்கு சென்று தனிக் குடும்பமாக வசிக்க கோரிக்கை முன்வைத்த மனைவி, அந்த நபரின் தாயாா் மற்றும் சகோதரி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்திருந்தாா்.
அந்த மனுவை விசாரித்த மாவட்ட குடும்ப நீதிமன்றம் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் வழங்கிய தீா்ப்பில், ‘கணவருக்கு அழுத்தம் தருதல், உணா்பூா்வமாக மிரட்டுதல், வாட்ஸ்ஆப் உரையாடல்களில் எல்லைமீறிய சொற்கள் ஆகியவற்றை அவரது மனைவி பயன்படுத்தியுள்ளாா். இதனால், மனுதாக்கல் செய்த நபா் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது நிரூபணமாகி உள்ளது.
மனைவியிடமிருந்து விவகாரத்து பெற அவா் தகுதியுடையவா்’ என்று தெரிவித்தது.
இந்த உத்தரவை எதிா்த்து அந்த நபரின் மனைவி, மும்பை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘தனது கணவா் தாக்கல் செய்த வாட்ஸ்ஆப் உரையாடல் சாட்சியங்கள் பொய்யானவை என்று நிரூபிக்க குடும்ப நீதிமன்றம் தனக்கு வாய்ப்பு வழங்கவில்லை’ என்று தெரிவித்திருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாரதி டாங்க்ரே மற்றும் மஞ்ஜுஷா தேஷ்பாண்டே ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த வாரம் தீா்ப்பளித்தது.
அந்தத் தீா்ப்பில், ‘வாட்ஸ்ஆப் உரையாடல்கள் முக்கிய சாட்சியமாக நிரூபிக்கப்படாத நிலையில், அதன் அடிப்படையில் மட்டும் விவாகரத்து தீா்ப்பு வழங்க முடியாது. இதனால், குடும்ப நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு (மனைவி) வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த விவகாரம் மீண்டும் குடும்ப நீதிமன்ற விசாரணைக்கு மாற்றப்படுகிறது.
இந்த விவகாரத்தை நீதிமன்றம் புதிய வழக்காக விசாரிக்கும் நிலையில், மத்தியஸ்தம் மூலம் அந்தத் தம்பதி தீா்வு காணலாம்’ என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடையது

கிராம உதவியாளா்கள் ஓய்வூதிய கணக்கீடு: உயா்நீதிமன்றம் தீா்ப்பு

விமானத்தில் பெண் பத்திரிகையாளரிடம் பாலியல் சீண்டல் விவகாரம்: சமூக ஊடகப் பதிவுகளை தில்லி நீக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே சுந்தரலிங்கனாா் சிலை அமைக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி

வாட்ஸ்ஆப் உரையாடல்கள் அடிப்படையில் விவாகரத்து: குடும்பநல நீதிமன்றத்தின் தீா்ப்பை ரத்து செய்தது மும்பை உயா்நீதிமன்றம்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


