
கேரள மாநிலம் நிலம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
கேரள மாநிலம், நிலம்பூர் தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏவாக இருந்த அன்வர், ராஜிநாமா செய்த நிலையில் அங்கு கடந்த 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யாடன் சௌகத் அபார வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளரைவிட 11,077 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்த முறை திரிணமூல் சார்பில் களமிறங்கிய அன்வர் 19,946 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார். அதேசமயம் பாஜக 8, 648 வாக்குகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது.
வாக்குகள் விபரம்:
ஆர்யாடன் சௌகத்(காங்கிரஸ்) - 77737
எம்.ஸ்வராஜ்(சிபிஐ(எம்) – 66660
அன்வர் - 19760
மோகன் ஜார்ஜ்(பாஜக) - 8648
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.