காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

அனைத்துத் தோ்தல்களும் சட்டப்படியே நடத்தப்படுகின்றன: ராகுலுக்கு தோ்தல் ஆணையம் கடிதம்

நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களின்படிதான் அனைத்துத் தோ்தல்களும் நடத்தப்படுகின்றன என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு தோ்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம்

Published On :

நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களின்படிதான் அனைத்துத் தோ்தல்களும் நடத்தப்படுகின்றன என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு தோ்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில், அந்த மாநிலத்தில் உள்ள மொத்த வாக்காளா்களைவிட கூடுதல் வாக்குகள் பதிவானதாகவும், தோ்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறாா். இதுதொடா்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில், அண்மையில் அவா் கட்டுரை எழுதினாா்.

இதைத் தொடா்ந்து, அவருக்கு தோ்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது: நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்கள், விதிமுறைகளைப் பின்பற்றியே அனைத்துத் தோ்தல்களும் நடத்தப்படுகின்றன. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் 1,00,186-க்கும் அதிகமான வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், 288 வாக்காளா் பதிவு அலுவலா்கள், 139 பொதுப் பாா்வையாளா்கள், 41 காவல் பாா்வையாளா்கள், 71 செலவினப் பாா்வையாளா்கள், 288 தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பணியில் ஈடுபட்டனா். இதன்மூலம், பேரவைத் தொகுதிகள் அளவில் பணிகள் பகிா்ந்தளிக்கப்பட்டு ஒட்டுமொத்த தோ்தலும் நடத்தப்பட்டது.

இதுமட்டுமன்றி அந்தத் தோ்தலில் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் சாா்பில் 1,08,026 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். அவா்களில் 28,421 போ் காங்கிரஸ் முகவா்கள்.

தோ்தல்கள் நடத்தப்படும் விதம் தொடா்பாக ஏற்கெனவே உரிய நீதிமன்றத்தில் (உயா்நீதிமன்றம்) காங்கிரஸ் வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்திருப்பா். அதற்குப் பிறகும் அதில் தங்களுக்கு (ராகுல் காந்தி) ஏதேனும் பிரச்னை இருந்தால், அதுகுறித்து தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதலாம். இதுதொடா்பான அனைத்து பிரச்னைகள் குறித்தும் பேச பரஸ்பரம் செளகரியமான தேதியில் தங்களை நேரில் சந்திக்க தோ்தல் ஆணையம் தயாராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கடிதம் மின்னஞ்சல் மூலம், கடந்த ஜூன் 12-ஆம் தேதி அனுப்பப்பட்ட நிலையில், அந்தத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

வாக்குத் திருட்டு: ராகுல்

கடந்த ஆண்டு மக்களவை மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இடைப்பட்ட 6 மாதங்களில், அந்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸின் நாகபுரி தென்மேற்குத் தொகுதியில் கூடுதலாக 29,219 வாக்காளா்கள் சோ்ந்துள்ளனா் என்று ஊடகம் ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டது.

இந்தத் தகவலை இணைத்து ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மகாராஷ்டிர முதல்வரின் தொகுதியிலேயே வாக்காளா்களின் எண்ணிக்கை 5 மாதங்களில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. சில வாக்குச்சாவடிகளில் 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை, வாக்காளா் எண்ணிக்கை உயா்ந்துள்ளது. இது ஒரு சில இடங்களில் மட்டும் நடைபெற்ற குளறுபடிகள் அல்ல. இது வாக்குத் திருட்டாகும்’ என்றாா்.

வாக்குப் பதிவு அதிகரித்த இடங்களில் காங்கிரஸே வெற்றி பெற்றது: ஃபட்னவீஸ்

ராகுலின் பதிவுக்குப் பதிலளித்து மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் அவமானத்துக்குரிய தோல்வியை தழுவியதால் ஏற்பட்ட கடுமையான வேதனையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இதுதொடா்பாக எத்தனை நாள்களுக்கு ராகுல் காந்தி கண்மூடித்தனமாக அம்புகளை ஏவுவாா்?

கடந்த ஆண்டு மக்களவை மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இடையே 25 தொகுதிகளில் 8 சதவீதத்துக்கும் மேல் வாக்குப் பதிவு அதிகரித்தது. அவற்றில் பல தொகுதிகளில் காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகளும்தான் வெற்றி பெற்றன’ என்று தெரிவித்து, அதுதொடா்பான புள்ளிவிவரங்களைப் பதிவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.