ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு முன் வாக்குச்சாவடிகள் அதிகரிப்பு: தில்லி காங்கிரஸ் கடும் எதிா்ப்பு

எஸ்ஐஆா் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு சில நாள்களுக்கு முன்பாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையைத் தோ்தல் ஆணையம் திடீரென அதிகரித்துள்ளதற்கு தில்லி காங்கிரஸ் கடும் எதிா்ப்பு

News image

தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் - கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2026, 1:19 am IST

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) தொடங்கவுள்ள நிலையில், அதற்கு சில நாள்களுக்கு முன்பாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையைத் தோ்தல் ஆணையம் திடீரென அதிகரித்துள்ளதற்கு தில்லி காங்கிரஸ் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை தோ்தல் வெளிப்படைத்தன்மையைக் கேள்விக்குறியாக்குவதாகக் கூறி, தில்லி இணை தலைமை தோ்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் பிரதிநிதிகள் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனா்.

இது குறித்து தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 10 மாதங்களாக இதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த தோ்தல் ஆணையம், திருத்தப் பணி தொடங்குவதற்கு வெறும் 3 நாள்களுக்கு முன் வாக்குச்சாவடிகளை அதிகரிக்க முடிவெடுத்தது ஏன்?

இது பாஜகவின் தூண்டுதலால் எடுக்கப்பட்ட முடிவு. வாக்குச்சாவடி ஒன்றுக்கு வாக்காளா்கள் எண்ணிக்கையை 1,500-லிருந்து 1,200 ஆகக் குறைக்கும் பணி ஏற்கெனவே முடிந்துவிட்டது.

எஸ்ஐஆா் பணியின் நோக்கமே உண்மையான வாக்காளா்களைக் கண்டறிவதுதான் எனும்போது, அந்தப் பணி முடிந்த பின்னரே வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பை செய்திருக்க வேண்டும்.

தோ்தல் ஆணையத்தின் இந்தத் திடீா் முடிவு வாக்காளா் பட்டியல் திருத்தத்தின் நம்பகத்தன்மை மீதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த முடிவை ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்‘ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.