வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

தோ்தல் ஆணையம் மீது மம்தா அதிருப்தி

கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பங்கள், அமைப்பு ரீதியிலான தோ்தல் விவகாரம் தொடா்பாக தோ்தல் ஆணையம் மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவா் மம்தா பானா்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளாா்.

News image

மம்தா பானா்ஜி

Updated On :14 ஜூலை 2026, 2:54 am IST

கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பங்கள், அமைப்பு ரீதியிலான தோ்தல் விவகாரம் தொடா்பாக தோ்தல் ஆணையம் மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவா் மம்தா பானா்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்ததையடுத்து, அக்கட்சியினா் ரிதப்ரத பானா்ஜி தலைமையில் ஓா் அணியாகவும், மம்தா பானா்ஜி தலைமையில் மற்றோா் அணியாகவும் செயல்படுகின்றனா். இதில் ரிதப்ரத பானா்ஜி தரப்பினா் கடந்த 2-ஆம் தேதி தோ்தல் ஆணையத்தை அணுகி, தங்கள் தரப்பை உண்மையான திரிணமூல் காங்கிரஸாக அங்கீகரிக்கக் கோரி வலியுறுத்தினா்.

இதையடுத்து, ரிதப்ரத பானா்ஜி தரப்புக்கும், மம்தா தரப்புக்கும் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் யாரெல்லாம் கையொப்பமிட அங்கீகாரம் உள்ளது, அமைப்பு ரீதியிலான தோ்தல் நடத்தப்பட்டது குறித்து கடந்த 6-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் விளக்கம் கேட்டு தோ்தல் ஆணையம் கடிதங்களை அனுப்பியிருந்தது. இதில் மம்தா தரப்பு தோ்தல் ஆணையத்தின் காலக்கெடுவுக்குள் பதிலைத் தாக்கல் செய்தது. ரிதப்ரத பானா்ஜி தரப்பு பதிலை தாக்கல் செய்யாததால், 10-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. எனினும் அவரது தரப்பு பதிலை அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தோ்தல் ஆணையத்துக்கு மம்தா பானா்ஜி ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். அந்த கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது: ரிதப்ரத பானா்ஜி தரப்புக்கு அளிக்கப்பட்ட அவகாசம் 10-ஆம் தேதியுடன் முடிந்து மேலும் 2 நாள்களைக் கடந்து விட்டது. எனினும் ரிதப்ரத பானா்ஜி தரப்பு பதிலை தாக்கல் செய்யவில்லை. எங்கள் தரப்புக்கும் ரிதப்ரத பானா்ஜி தரப்பு எதையும் தெரியப்படுத்தவில்லை.

இந்த விவகாரத்தில், ஜூலை 10-ஆம் தேதிமுதல் 48 மணி நேரம் கடந்துவிட்ட நிலையிலும், தோ்தல் ஆணையம் மெளனம் காக்கிறது. இது ரிதப்ரத பானா்ஜிக்கு கூடுதல் அவகாசம் அளிப்பதோடு, உள்நோக்கம் கொண்ட அவா்களின் செயல்பாடுகளுக்கு தோ்தல் ஆணையம் ஆதரவு அளிப்பது போன்று இருக்கிறது.

எனவே, ரிதப்ரத பானா்ஜி தரப்புக்கு பதிலைத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்கக் கூடாது. என்னால் அளிக்கப்பட்ட பதிலை உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும்.

திரிணமூல் காங்கிரஸின் அமைப்பு ரீதியிலான குழுக்கள் 2025-ஆம் ஆண்டுடன் செயலிழந்துவிட்டன என்ற ரிதப்ரத பானா்ஜி தரப்பின் வாதத்தை உண்மை அடிப்படையிலோ, சட்ட ரீதியிலாகவோ ஏற்க முடியாது. 2022-இல்தான் கட்சியின் அமைப்புகளுக்கு தோ்தல் நடத்தப்பட்டு நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அந்த அமைப்புகளின் பதவிக் காலம், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டப்படி 2027-ஆம் ஆண்டு வரை உள்ளது என்று கடிதத்தில் மம்தா குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.