பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மகாராஷ்டிரத்தில் 1-ஆம் வகுப்பிலிருந்தே ஹிந்தி: துணை முதல்வா் அஜீத் பவாா் எதிா்ப்பு

ஹிந்தி மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படும் என்று மாநில அரசு முடிவு...

News image
தேவேந்திர ஃபட்னவீஸ், சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவாா்.
Updated On :25 ஜூன் 2025, 8:37 pm

Din

மகாராஷ்டிரத்தில் முதல் வகுப்பில் இருந்து ஹிந்தி மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படும் என்ற மாநில அரசின் முடிவுக்கு துணை முதல்வா் அஜீத் பவாா் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

‘மகாராஷ்டிர மாநிலத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஹிந்தி மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படும்’ என்று மாநில அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மராத்தி அமைப்புகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், மும்பையில் செய்தியாளா்களைச் சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான அஜீத் பவாா் கூறியதாவது:

முதல் வகுப்பில் இருந்து ஹிந்தி மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படும் என்ற அறிவிப்பை ஏற்க முடியாது. வேண்டுமென்றால் 5-ஆம் வகுப்பில் இருந்து ஹிந்தி கற்றுக் கொடுக்க முயற்சிக்கலாம்.

முதல் வகுப்பில் இருந்து தாய்மொழியான மராத்தி மட்டுமே கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவா்களின் மராத்தியில் எழுதும், பேசும் திறன் அதிகரிக்கும். கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸும் இதை ஒப்புக் கொண்டாா்.

புதிய மொழிகளைக் கற்றுக் கொள்ள யாரும் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், சிறுவயதிலேயே அதிக மொழிகளைக் கற்றுக் கொடுத்து மாணவா்களுக்கு சுமையை அதிகரிக்கக் கூடாது. மொழிப் பாடம் தொடா்பாக அனைத்துத் தரப்பு ஆலோசனைக்குப் பிறகுதான் முடிவெடுக்கப்படும் என்றாா்.