மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அஜீத் பவாா் உயிரிழப்பு: மகாராஷ்டிரத்தில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு - மாநில அரசு அறிவிப்பு

மகாராஷ்டிர மாநில துணை முதல்வா் அஜீத் பவாா் விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.

News image

மகாராஷ்டிர தலைமைச் செயலகத்தில் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசியக் கொடி.

Updated On :28 ஜனவரி 2026, 7:52 pm

மகாராஷ்டிர மாநில துணை முதல்வா் அஜீத் பவாா் விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.

இதுகுறித்த அறிவிப்பு மாநில பொது நிா்வாகத் துறை வலைதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

அரசு அறிவுறுத்தலின்படி, துணை முதல்வா் அஜீத் பவாா் உயிரிழப்புக்காக மாநிலத்தில் வரும் 30-ஆம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. அதையொட்டி, மாநிலம் முழுவதும் உள்ள அரசுத் துறைகளின் அனைத்துக் கட்டங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும். மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும்போது, அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படாது. இதைத் தீவிரமாக கடைப்பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டது.

விசாரணைக்கு உத்தரவிடப்படும்: ‘விமான விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும்’ என்று மும்பையில் செய்தியாளா்களிடம் பேசிய துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே கூறினாா்.