அவரச நிலையின் போது ஜனநாயகத்தை காங்கிரஸ் கைது செய்தது போல் இருந்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அவசரநிலையின் 50-வது ஆண்டு நிறைவையொட்டி, அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி கடுமையான தாக்குதலைத் தொடர்ந்தார். மேலும், அந்தக் காலகட்டத்தில் அரசியலமைப்பின் அடிப்படை மீறப்பட்டதை இந்தியர் யாரும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பல்வேறு பதிவுகளையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “அவசர நிலையை பிரகடனப்படுத்தி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கிறது. அவசரநிலை இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று. இந்திய மக்கள் இந்த நாளை அரசியலமைப்பு படுகொலை நாளாகக் கருதுகின்றனர்.
இந்த நாளில், இந்திய அரசியலமைப்பு உரிமைகள் மீறப்பட்டன. அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டது. பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக சேவை செய்பவர்கள், மாணவர்கள் மற்றும் சாதாரண பொதுமக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு ஜனநாயகத்தை கைது செய்தது போல் இருந்தது!” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.