ஈரானில் இருந்து 3,400 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: வெளியுறவுத் துறை!

ஆபரேஷன் சிந்து மீட்புத் திட்டத்தின் மூலம் 3,400-க்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதைப் பற்றி...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

"ஆபரேஷன் சிந்து" மீட்புத் திட்டத்தின் மூலம் ஈரானிலிருந்து சுமார் 3,400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் நடைபெற்ற போரினால், அந்நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு ஆபரேஷன் சிந்து எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.

இந்நிலையில், இந்தத் திட்டத்தின் அடிப்படையில் இயக்கப்பட்ட 14 விமானங்கள் மூலம் ஈரானின் மஷாத் நகரத்திலிருந்து 3,426 இந்தியர்கள், 11 வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், 9 நேபாள நாட்டினர் மற்றும் சில இலங்கை நாட்டினர் ஆகியோர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஈரானில் சுமார் 10,000-க்கும் மேலான இந்தியர்களும், இஸ்ரேலில் 40,000-க்கும் மேலான இந்தியர்களும் வசித்து வருவதால், ஆபரேஷன் சிந்து நடவடிக்கைகள் மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மீட்பு நடவடிக்கைகளில், இந்தியரை திருமணம் செய்த ஈரான் நாட்டுப் பெண் ஒருவரும் இந்தியா அழைத்து வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களை மீட்க இயக்கப்பட்ட அவசரகால சிறப்பு விமானங்கள் அர்மேனியா, துருக்மெனிஸ்தான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் வழியாகவும் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

3,400 Indians return home from Iran said Ministry of External Affairs!

இதையும் படிக்க: தேர்தலில் போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள் நீக்கம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com