ஹிந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்! - மத்திய அமைச்சர் அமித் ஷா

ஹிந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் என மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியிருப்பதைப் பற்றி....
மத்திய அமைச்சர் அமித் ஷா.
மத்திய அமைச்சர் அமித் ஷா.
Published on
Updated on
1 min read

ஹிந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

மத்திய அரசின் அலுவல் மொழித் துறையின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “அனைத்து மாநில அரசுகளும் உள்ளூர் மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை வழங்க முன்முயற்சி எடுக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

சில நாள்களுக்கு முன்னதாக, ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் காலம் விரைவில் வரும் என்று தான் கூறியிருந்த கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹிந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என்றும், மொழிகள் மூலம் பாஜக அரசு இந்தியாவை ஒன்றிணைக்க முயற்சிக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவைப் பிரிக்க மொழி ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. அவர்களால் அதை பிரிக்க முடியவில்லை. ஆனால், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியாவை ஒன்றிணைக்க நமது மொழிகள் ஒரு சக்திவாய்ந்த தளமாக மாறுவதை நாங்கள் உறுதி செய்வோம். இதற்காக, அலுவல் மொழித் துறை செயல்படும்.

பிரதமர் மோடியின் தலைமையில் அமைக்கப்படும் அடித்தளம் 2047-ல் ஒரு சிறந்த இந்தியாவை உருவாக்கும். ஒரு சிறந்த இந்தியாவை உருவாக்கும் வழியில், நமது இந்திய மொழிகளை வளர்த்து, அவற்றை வளப்படுத்துவோம்.

ஜேஇஇ, நீட், கியூட் போன்ற தேர்வுகள் இப்போது 13 மொழிகளில் நடத்தப்படுகின்றன. முன்னதாக, சிஏபிஎஃப் கான்ஸ்டபிள் வேலைக்கான தேர்வுக்கு ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், நாங்கள் அதை மாற்றி 13 மொழிகளில் தேர்வை எழுத அனுமதித்துள்ளோம்.

இன்று 95 சதவிகிதத் தேர்வர்கள் தங்கள் தாய்மொழியில் கான்ஸ்டபிள் தேர்வை எழுதுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது வரும் நாள்களில் இந்திய மொழிகளின் எதிர்காலம் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

ஹிந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என்பதை நான் மனதார நம்புகிறேன். ஹிந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்” என்றார் அமித் ஷா.

Summary

Union Home Minister Amit Shah has said that Hindi is a friend of all Indian languages.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com