

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் ஜன.30 அன்று மேற்கு வங்கத்துக்குச் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரள ஆகிய மாநிலங்களில் நிகழாண்டில் (2026) சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் ஜன.30 அன்று மாலை மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து மேற்கு வங்கத்தின் பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவார் எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் வரும் ஜன.31 அன்று நடைபெறும் அரசியல் பேரணியில் அவர் கலந்துகொள்வார் எனவும், பின்னர் அன்று மாலை மீண்டும் தில்லி திரும்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே, மேற்கு வங்கத்திற்கு கடந்த ஜன.17 அன்று பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்த நிலையில், தற்போது மத்திய அமைச்சர் அமித் ஷா பயணம் மேற்கொள்வது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.