அடுத்தகட்ட வர்த்தக பேச்சு! வாஷிங்டன் சென்றடைந்த இந்திய குழு!

இந்தியா - அமெரிக்கா இடையில் அடுத்தகட்ட வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெறுவது குறித்து...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

அமெரிக்காவுடனான அடுத்த சுற்று வர்த்தக பேச்சுவார்த்தைக்காக, ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்திய குழுவொன்று அந்நாட்டு தலைநகர் வாஷிங்டனுக்கு சென்றடைந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான, வர்த்தக பேச்சுவார்த்தை அடுத்தகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இருநாடுகளும் ஜூலை 9 ஆம் தேதிக்கு முன்பு தங்களது வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, விவசாயம் மற்றும் பால்வளம் ஆகிய துறைகளில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் சவால்கள் இருப்பினும், இந்த இரண்டு நாள் வர்த்தக பேச்சுவார்த்தை இருநாடுகளுக்கும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவின் 49-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, பல்வேறு நாடுகளின் மீதான பரஸ்பர வர்த்தக வரியை பலமடங்கு உயர்த்தியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதியன்று, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருள்களுக்கு, 26 சதவிகிதம் பரஸ்பர வர்த்தக வரி விதிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு அரசு 90 நாள்களுக்கு ஜூலை 9 ஆம் தேதி வரை அந்த வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், இதுவரை, மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் இந்தியா பால்வளத்தை குறிப்பிடாததினால், அமெரிக்காவுக்கு விவசாயம் மற்றும் பால்வளம் ஆகிய துறைகளில் வரிச் சலுகைகள் வழங்குவது மிகவும் கடினமான ஒன்று எனக் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்தியாவிடம் ஆட்டோமொபைல்கள், மின்சார வாகனங்கள், ஒயின்கள், பெட்ரோ கெமிக்கல் பொருள்கள், பால், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் போன்ற விவசாயப் பொருகளில் அமெரிக்கா வரிச் சலுகைகளை எதிர்பார்க்கின்றது.

இதேபோல், முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களில், ஜவுளி, நகைகள், தோல் பொருள்கள், ஆடைகள், பிளாஸ்டிக், ரசாயனங்கள், இறால், எண்ணெய் வித்துக்கள் போன்ற உழைப்பு மிகுந்த துறைகளைச் சார்ந்த பொருள்களுக்கு இந்தியா வரிச் சலுகைகள் கோருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையை மேற்கொள்ள, முக்கிய பிரதிநிதிகள் அடங்கிய அமெரிக்க குழுவொன்று, கடந்த ஜூன் 5 முதல் ஜூன் 11 ஆம் தேதி வரை இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com