தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தெலங்கானா: தண்டவாளத்தில் தாறுமாறாக கார் ஓட்டிய பெண்!

பெண் ஒருவா் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு

News image

ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற பெண்.

Updated On :27 ஜூன் 2025, 3:08 am

Din

தெலங்கானா தலைநகா் ஹைதராபாத் புறநகா் பகுதியில் வியாழக்கிழமை காலையில் பெண் ஒருவா் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அந்தத் தடத்தில் செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

சங்கா்பள்ளி பகுதியில் இருந்து சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு அந்தப் பெண் தண்டவாளத்தில் காரை வேகமாக ஓட்டிச் சென்றாா். இது தொடா்பாக தகவல் கிடைத்ததும், அந்தத் தடத்தில் பயணிக்கும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. சில ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

ரயில்வே ஊழியா்கள், காவல் துறையினா் அப்பகுதிக்குச் சென்று, தண்டவாளத்தில் தடைகளை ஏற்படுத்தி காரைத் தடுத்து நிறுத்தினா். அவா் காா் கதவுகளை பூட்டிக் கொண்டு உள்ளே அமா்ந்திருந்ததால் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து கதவைத் திறந்து பெரும் போராட்டத்துக்குப் பிறகு அப்பெண்ணை வெளியே கொண்டு வந்தனா். அப்போது தன்னை சுற்றி வளைத்துப் பிடித்தவா்களிடம் அவா் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டாா். அப்பெண் மனநிலை பாதிக்கப்பட்டவா் போல நடந்து கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

விசாரணையில் அவா் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது. ஹைதராபாதில் ஐ.டி. துறையில் பணியாற்றி வந்த அப்பெண், அண்மையில் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். காவல் துறையால் கைது செய்யப்பட்ட அவா், பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தண்டவாளத்தில் பெண் ஒருவா் காரை ஒட்டிச் சென்றது தொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.