
கோவா மாநில காவல் துறையினர் மேற்கொண்ட ”ஆபரேஷன் ஃபிளஷ் அவுட்” நடவடிக்கையின் மூலம், இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்த 79 வெளிநாட்டவர் வெளியேற்றப்பட்டனர்.
”ஆபரேஷன் ஃபிளஷ் அவுட்” நடவடிக்கையின் மூலம் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜூன் 27 ஆம் தேதி வரையிலான காலத்தில், கோவாவில் சட்டவிரோதமாக வசித்ததாகக் கைது செய்யப்பட்ட 79 வெளிநாட்டவர்கள், தங்களது தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களில் 47 பெண்கள் மற்றும் 32 ஆண்கள் நாடுகடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனபது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், 47 பெண்களில்; 17 பேர் உகாண்டா, 14 பேர் வங்கதேசம், 12 பேர் ரஷியா மற்றும் பிரிட்டன், உக்ரைன், பெலாரஸ், அர்ஜெண்டீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் வெளியேற்றப்பட்டனர்.
இதேபோன்று, 32 ஆண்களில், ரஷியா (13), வங்கதேசம் (12) மற்றும் உகாண்டா, நைஜீரியா, போலாந்து, மொராக்கோ, பிரிட்டன் மற்றும் மொரீசியஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் நாடு வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
SUMMARY
79 foreigners residing illegally deported from Goa!
இதையும் படிக்க: பாகிஸ்தான் நடிகை நடித்ததால் தடைசெய்யப்பட்ட பஞ்சாபி திரைப்படம்? படக்குழுவுக்கு 40% இழப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.