சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

புணேவில் சட்டவிரோதமாக குடியேறிய 11 வங்கதேச பெண்கள் கைது!

புணேவில் சட்டவிரோதமாக குடியேறிய 11 வங்கதேச பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...

கோப்புப் படம்

Updated On :

மகாராஷ்டிர மாநிலம் புணேவில், சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தைச் சேர்ந்த 11 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புணே மாவட்டத்தின் புத்வார் பெத் பகுதியில், சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்கள் வசித்து வருவதாக, அம்மாநில காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் காவல் துறையினர் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கையில், போலியான ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வசித்து வந்த 22 பெண்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரெட் லைட் பகுதி எனக் கூறப்படும் புத்வார் பெத்தில் கைது செய்யப்பட்ட 22 பெண்களில் 11 பேர் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் என காவல் துறை துணை ஆணையர் க்ருஷிகேஷ் ராவாலே கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, கொல்கத்தாவில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாக, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த 6 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

11 illegal Bangladeshi women have been arrested in Pune, Maharashtra.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.