ரத யாத்திரையில் தறிகெட்டு ஓடிய கோயில் யானைகள்! மக்கள் பீதி!

அகமதாபாத் ரத யாத்திரையில் தறிகெட்டு ஓடிய கோயில் யானைகளால் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பீதியடைந்தனர்.
அகமதாபாத் ஜெகந்நாதர் ரத யாத்திரையில் தறிகெட்டு ஓடிய கோயில் யானைகள்.
அகமதாபாத் ஜெகந்நாதர் ரத யாத்திரையில் தறிகெட்டு ஓடிய கோயில் யானைகள்.
Published on
Updated on
1 min read

அகமதாபாத் ரத யாத்திரையில் தறிகெட்டு ஓடிய கோயில் யானைகளால் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பீதியடைந்தனர்.

புகழ்பெற்ற ஜெகந்நாதரின் ரத யாத்திரை ஒடிசாவின் புரி மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இன்று காலை முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. மேற்கு வங்கம், குஜராத் போன்ற மாநிலங்களிலும் விமர்சையாக நடைபெற்று வருகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் 148-ஆம் ஆண்டு ஜெகந்நாதரில் ரத யாத்திரையில் அம்மாநில முதல்வர் பூபேந்திர பாட்டீல் விழாவில் கலந்து கொண்டு தலைமை வகித்தார். அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் ரத யாத்திரை பங்கேற்பதற்காக குவிந்தனர்.

ஜமால்பூரில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் மங்கல ஆரத்தியுடன் விழா தொடங்கியது. இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். மேலும், அங்கிருந்த துறவிகள் மற்றும் ஞானிகளிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

காதியா பகுதியில் ரத யாத்திரையின் போது அலங்கரிக்கப்பட்ட யானைகளின் ஊர்வலமும் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த இளைஞர் அதீத சப்தம் மற்றும் விசில் ஒலி எழுப்பியதால், திடீரென ஒரு யானை மிரண்டு அங்கிருந்து பொதுமக்கள் கூட்டத்தை நோக்கி ஓடியது. இந்த விடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனைக்கண்டு அங்கு குழுமியிருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதோடு மேலும், 2 யானைகளும் ஓடின. யானைகள் தாக்கியதில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 18 யானைகளில், தறிகெட்டு ஓடிய மூன்று யானைகள் பாகன்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அங்கிருந்து வேறு பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

22 கி.மீட்டர் தொலைவுக்கு நடைபெறும் இந்த தேர் யாத்திரை இரவு முடிவடையும் என்பதால், அசம்பாவிதங்களைத் தடுக்க காவல் துறையினர் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஹரித்வார், அயோத்தி, நாசிக், உஜ்ஜைன், ஜகந்நாதபுரி மற்றும் சௌராஷ்டிரத்தைச் சேர்ந்த 2,500 துறவிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

Summary

Chaos broke out during the Jagannath Rath Yatra in Ahmedabad on Thursday after a group of elephants accompanying the procession went out of control and trampled several people.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com