அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

தெலங்கானா சுரங்க விபத்து: ரோபோக்கள் உதவியுடன் மீட்புப்பணி

சுரங்கத்துக்குள் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ரோபோக்கள்

News image

PTI

Updated On :2 மார்ச் 2025, 10:29 pm IST

தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ரோபோக்களை பயன்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

என்ன நடந்தது?

தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்.22-ஆம் தேதி சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் மேற்பகுதி இடிந்து விழுந்ததால், அதில் 2 பொறியாளா்கள், 2 ஆப்பரேட்டா்கள், 4 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா்.

அவா்கள் உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். அவா்களை மீட்கும் பணி ஒரு வாரமாக நீடித்து வருகிறது. தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம், கடற்படை வீரா்கள் என மொத்தம் 500-க்கும் மேற்பட்டவா்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், சுரங்கத்துக்குள் சிக்கியவா்களை மீட்கும் பணியில் தேவைப்பாட்டால் ரோபோக்களும் பயன்படுத்தப்படும் என்று தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று(மார்ச். 2) தெரிவித்துள்ளார். சுரங்க விபத்து நிகழ்ந்த பகுதியில் சென்று இன்று ஆய்வு செய்த அவர், சுரங்கத்தினுள் எந்த இடத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர் என்ற சரியான இடத்தை இன்னும் துல்லியமாக கண்டறிய முடியவில்லை என்றுதெரிவித்தார்.

கன்வேயர் பெல்ட் சரிசெய்யப்பட்ட பின் திங்கள்கிழமை மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெறும் என்றும், மீட்புபணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு ஆபத்து ஏற்படாமலிருக்க ஏதுவாக ரோபோக்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.