முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

காஷ்மீரின் உரிமை மீட்கும் வரை போராட்டம் ஓயாது! ஃபரூக் அப்துல்லா

காஷ்மீரின் உரிமை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என்பதைப் பற்றி..

 Farooq Abdullah

ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா - (கோப்புப் படம்)

Published On :

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு, ஆகஸ்ட் 5, 2019 அன்று 370-வது பிரிவை ரத்து செய்தது. இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய அப்துல்லா,

ஆகஸ்ட் 5, 2019 அன்று நடந்தது அரசியலமைப்புக்கு முரணானது என்பது அனைவருக்கும் தெரியும்.

எனவே, தற்போது நாடு முழுவதும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு உள்ளது. காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான போராட்டம் தொடரும்.

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது குறித்த தனது கொள்கை என்ன என்று கேட்டபோது,

​​எனக்கென்று தனிப்பட்ட கொள்கை எதுவும் இல்லை, ஆனால், தேசிய மாநாட்டுக் கட்சிக்குத்தான் கொள்கை உள்ளது.

பிடிபி தலைவர் மெஹபூபா முஃப்திக்கு எதிராக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்த கருத்துகள் குறித்த கேள்விக்கு, அது குறித்து அவரே பதிலளிக்கலாம் என்று அவர் கூறினார்.

ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நிறைவு நாளான புதன்கிழமையன்று, போராட்டங்களும் கொண்டாட்டங்களும் நடைபெற்றன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்கக் கோரி, நேஷனல் கான்பரன்ஸ் மற்றும் எதிர்க்கட்சியான பிடிபி ஆகியவை அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்தின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்