ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!தவெக ஆட்சியில் பணவீக்கம், விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!காஞ்சிபுரத்தில் இந்தியாவிலேயே சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம்! ஜனவரியில் திறந்து வைக்கிறார் முதல்வர்!ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசு

தெலங்கானா சுரங்க விபத்து: விஞ்ஞானிகள் பரிந்துரைத்த இடங்களில் மீட்புப் பணி!

தெலங்கானா சுரங்க விபத்து மீட்புப் பணி தொடர்பாக...

தெலங்கானா சுரங்க விபத்து நடந்த பகுதி.

Published On :

தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளா்களைக் கண்டறிவதற்கு விஞ்ஞானிகள் பரிந்துரைத்த இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஹைதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள், மனிதர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக தரை ஊடுருவும் ரேடார்(GPR) ஆய்வை நடத்தினர்.

இந்த விஞ்ஞானிகள் பரிந்துரைத்த இடங்களில் துளையிட்டு தேடியதில் உலோகங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதால், மீண்டும் மற்றொரு இடத்தில் இருந்து ரேடார் ஆய்வைத் தொடங்கவுள்ளனர்.

”இந்த ரேடார் ஆய்வில் மூலம் விஞ்ஞானிகள் பரியந்துரைத்த இடத்தில் சேறு, இடிபாடுகளை அகற்றியப் பின்னர் உலோகங்கள் மட்டுமே கண்டறியப்பட்டது. இதனால் மற்றொரு இடத்தில் இருந்து மீண்டும் ரேடார் ஆய்வை நடத்த விஞ்ஞானிகள் தயாராக உள்ளனர்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் கடந்த பிப். 22-ஆம் தேதி நடைபெற்றன. அப்போது சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இதில் 2 பொறியாளா்கள், 2 ஆப்பரேட்டா்கள், 4 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா். சுரங்கத்துக்குள் சேறு, தண்ணீா், இடிபாடுகள் சூழ்ந்திருப்பதால் அவா்களை மீட்பதில் ஒரு வாரத்துக்கும் மேல் சிக்கல் நீடிக்கிறது. எனினும், மீட்புக் குழு தொடா் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

சுரங்கத்தில் தொழிலாளா்கள் சிக்கியுள்ள இடத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை. தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஜிஆா்ஐ) அடையாளம் கண்ட இடங்களில், ‘எலிவளை சுரங்க’ தொழிலாளா்கள் துளையிட்டுத் தேடினா். ஆனால், அங்கு யாரும் கண்டறியப்படவில்லை.

மீட்புப் பணிகளை முதல்வா் ரேவந்த் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டாா். அப்போது அவர் கூறுகையில், ”மீட்புக் குழுவினரின் கணிப்பில் ஓரிடத்தை உறுதிப்படுத்தி, பணிகளைத் தொடா்ந்து வருகின்றனா். மீட்புக் குழுவினரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மீட்புப் பணியில் ரோபோக்களை பயன்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு ஆதரவளிக்க அரசு தயாராக உள்ளது. விபத்தில் சேதமடைந்த ‘கன்வேயா் பெல்ட்’ சரிப்படுத்தப்பட்டதும், மீட்புப் பணிகள் மீண்டும் வேகமெடுக்கும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.