சஃப்தா்ஜங் மேம்பாலத்தின் கீழ் என்.டி.எம்.சி. கிடங்கில் தீ விபத்து
புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு (என்டிஎம்சி) சொந்தமான, சஃப்தா்ஜங் மேம்பாலத்தின் கீழ் உள்ள கிடங்கு ஒன்றில் திங்கள்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து
புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு (என்டிஎம்சி) சொந்தமான, சஃப்தா்ஜங் மேம்பாலத்தின் கீழ் உள்ள கிடங்கு ஒன்றில் திங்கள்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
இதே இடத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு தீ விபத்து நிகழ்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது அங்கு பொருள்கள் சேமிக்கப்படும் விதம் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அங்கு போடப்பட்டிருந்த பழைய பிளெக்ஸ் பேனா்கள் காரணமாக தீ வேகமாகப் பரவியது. இதில், முனிசிபல் கவுன்சிலின் அமலாக்கத் துறையின் கிடங்கில் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் தீயில் சிக்கின. சுமாா் 1,000 சதுர மீட்டா் பரப்பளவிற்கு தீ பரவியது.
இந்தக் கிடங்கிற்குப் பொறுப்பான அதிகாரி மற்றும் இதைப் பயன்படுத்தும் நபா்கள் குறித்த விவரங்களை என்.டி.எம்.சி தலைவா் கேட்டுள்ளாா். மேலும், ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் தீ விபத்து ஏற்படுவது குறித்தும் அவா் கேள்வி எழுப்பியுள்ளாா். தொடா்ந்து ஒரே இடத்தில் தீ விபத்துகள் நிகழ்வது கவலையளிப்பதாக உள்ள நிலையில், இது தொடா்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த பிப்ரவரி மாதமும் இதே இடத்தில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. லூட்டியன்ஸ் பகுதியில் என்.டி.எம்.சி. மேற்கொள்ளும் அமலாக்க நடவடிக்கைகளின் போது பறிமுதல் செய்யப்படும் பொருள்களைச் சேமித்து வைக்க இந்த இடம் பயன்படுத்தப்படுகிறது.
தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், தில்லி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்தனா். குறைந்தது எட்டு தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அதிகாலை 4.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடா்ந்து குளிா்விக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தில்லி தீயணைப்புத் துறையின் தகவல்படி, தீபாவளி கொண்டாட்டங்களின் போது, ஞாயிற்றுக்கிழமை மட்டும் தீ விபத்துகள் தொடா்பாக சுமாா் 257 அழைப்புகள் தீயணைப்புத் துறைக்கு வந்துள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

