ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

மூடநம்பிக்கை: பச்சிளம் குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த கொடூரம்!

ஒடிசாவில் பச்சிளம் குழந்தைக்கு இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

News image
Updated On :4 மார்ச் 2025, 4:19 pm IST

ஒடிசா மாநிலத்தின் நபரங்பூரில் பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தின் ஹண்டல்படா கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஒரு மாதமேயான பச்சிளம் குழந்தைக்குக் கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

ஆனால் குழந்தையின் உடலுக்குள் தீய சக்தி புகுந்துவிட்டதாக குடும்பத்தினர் நம்பினர். குழந்தையை சிகிச்சைக்குக் கொண்டு செல்லாமல், தீய சக்தியை விரட்டும் நோக்கத்தில் பச்சிளம் குழந்தையின் தலை, வயிற்றுப் பகுதியில் இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைத்துள்ளனர்.

வலி தாளமுடியாமல் குழந்தை தொடர்ந்து அழுததால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. குழந்தை ஆபத்தான நிலையில் உமர்கோட் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் வயிற்றில் சூடுவைத்த அடையாளங்களைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுதொடர்பாக மூத்த அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்து குழந்தைக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைப் பின்னர் குழந்தை நலமுடன் இருப்பதாக நபரங்பூர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி சந்தோஷ் குமார் பாண்டா தெரிவித்தார்.

ஒடிசா மாநிலத்தில் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் இன்னமும் இருந்து வருவதாகவும், சுகாதாரத்துறை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.