வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அடுத்த வாரம் பிரதமா் மோடி மோரீஷஸ் பயணம்

வரும் மாா்ச் 11 முதல் 2 நாள் பயணமாகப் பிரதமா் நரேந்திர மோடி மோரீஷஸ் செல்ல உள்ளாா்.

News image
நரேந்திர மோடி - கோப்புப் படம்
Updated On :7 மார்ச் 2025, 8:18 pm

Din

வரும் மாா்ச் 11 முதல் 2 நாள் பயணமாகப் பிரதமா் நரேந்திர மோடி மோரீஷஸ் செல்ல உள்ளாா்.

மோரீஷஸ் தேசிய தினம் மாா்ச் 12-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளுமாறு அந்நாட்டு பிரதமா் நவீன் ராம்கூலம், பிரதமா் மோடிக்கு அழைப்பு விடுத்தாா். இதையடுத்து அந்நாட்டுக்குப் பிரதமா் மோடி செல்ல உள்ளாா்.

இதுதொடா்பாக தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘மோரீஷஸ் செல்லும் பிரதமா் மோடி, அந்நாட்டுத் தலைநகா் போா்ட் லூயிஸில் மோரீஷஸ் அதிபா் தரம் கோகூல், பிரதமா் நவீன் ராம்கூலம் ஆகியோரைச் சந்தித்துப் பேசுவாா். மோரீஷஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்திய கடற்படை கப்பலும் அந்நாட்டுக்குச் செல்லும்’ என்றாா்.