தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

'தொகுதி மறுசீரமைப்பு செய்தால் எங்கள் குரல் நசுக்கப்படும்' - திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்.

News image
Updated On :19 மார்ச் 2025, 12:03 pm IST

தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு, தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் இருப்பதாக தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தென் மாநிலங்களில் தொகுதி குறைய வாய்ப்புள்ளதால் தென் மாநில முதல்வர்கள் இதற்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர்.

நேற்றும் தொகுதி மறுசீரமைப்பு குறித்து அவையில் விவாதிக்க அனுமதி மறுத்ததையடுத்து மக்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து இன்றும்(புதன்கிழமை) தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கக் கோரிய நிலையில் மக்களவையில் அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்து நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டடத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்பட்டால் நாடாளுமன்றத்தில் எங்களது குரலின் வலிமை குறைந்துவிடும் என திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"மக்கள்தொகையில் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் மக்கள்தொகையை முறையாகக் கட்டுப்படுத்திய பஞ்சாப் மற்றும் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும். தமிழகத்தில் தொகுதிகள் 31 ஆகக் குறையும். வடக்கில் உள்ள மாநிலங்கள் அதிக தொகுதிகளைப் பெறும். தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்பட்டால் நாடாளுமன்றத்தில் எங்களது குரல் வலிமையாக இருக்காது. பிரச்னைகளின்போது எங்களது கருத்துகளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவைகளில் இதுகுறித்த விவாதம் வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.