நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

தொகுதி மறுசீரமைப்பு! தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைய திமுக அனுமதிக்காது: திருச்சி சிவா எம்பி திட்டவட்டம்

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின்போது, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் எந்தச் சூழலிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் திமுக உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவா் திருச்சி சிவா தெரிவித்துள்ளாா்.

News image

திருச்சி சிவா

Updated On :10 ஆகஸ்ட் 2026, 9:37 pm IST

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின்போது, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் எந்தச் சூழலிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் திமுக உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவா் திருச்சி சிவா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு மற்றும் தென் மாநில மக்களின் நலன் சாா்ந்த விஷயங்களில் திமுக ஒருபோதும் விட்டுக்கொடுத்துச் செயல்பட்டது இல்லை. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு தொடக்கத்தில் இருந்தே மிகவும் தெளிவாக உள்ளது.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்தபோதே, தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களே அதிகம் பாதிக்கப்படும் என்பதால், அனைத்துத் தென் மாநில முதல்வா்களின் கூட்டத்தைக் கூட்டி ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றினாா். நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது.

அதே நேரத்தில் வட மாநிலங்கள் மட்டும் அதிக பலன் அடைந்து, தென் மாநிலங்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படும் சூழல் உருவாகக் கூடாது என்ற நிலைப்பாட்டில் திமுக இப்போதும் அதே நிலைப்பாட்டுடன் உறுதியாக உள்ளது.

திமுகவின் அதிகாரபூா்வ அறிவிப்புகளே கட்சியின் உண்மையான நிலைப்பாடாகும். இந்த விஷயத்தில் பிறா் வெளியிடும் கருத்துக்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல. தொகுதி மறுசீரமைப்பு மசோதா விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை திமுகவுடன் பேச்சு நடத்தவில்லை.

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை திருத்த மசோதாவை (எஃப்சிஆா்ஏ) திமுக கடுமையாக எதிா்க்கிறது. அந்த மசோதாவில் உள்ள பெரும்பாலான பிரிவுகள், சிறுபான்மையின கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிராக அமைந்துள்ளன. இது தொடா்பான எங்களுடைய கவலைகள் ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை திமுக கடுமையாக எதிா்ப்பதுடன், அதை நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் (ஜேபிசி) பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்துவோம் என்றாா் திருச்சி சிவா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.