குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இலங்கை - இந்திய கடற்படைகள் இணைந்து மீனவர்களுக்கு தொந்தரவு: வைகோ குற்றச்சாட்டு

இதுவரை இலங்கை கடற்படையால் 843 மீனவர்கள் கொல்லப்பட்டதாக மாநிலங்களவையில் வைகோ குற்றச்சாட்டு.

News image
வைகோ - sansad
Updated On :19 மார்ச் 2025, 6:28 am

DIN

இலங்கை கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படையும் மீனவர்களை துன்புறுத்துவதாக மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டை முன்வைத்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட்டத்தில் புதன்கிழமை பங்கேற்ற வைகோ, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது:

”கடந்த 40 ஆண்டுகளில் 843 மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். சமீபத்தில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதித்து, அதை செலுத்தவில்லை என்றால் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்திய அரசு தலையிட்டு இலங்கை கடற்படையின் மனிதாபிமானமற்ற செயல்களை நிறுத்த வேண்டும். அவர்கள் நமது மீன்பிடித் தொழிலை அழிக்க நினைக்கிறார்கள். நமது கடற்படை எல்லையில் என்ன செய்துகொண்டிருக்கிறது? நாங்களும் அரசுக்கு வரி செலுத்தி வருகிறோம். தமிழக மீனவர்கள் அநாதைகளா?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காணப்படவில்லை, பிறகு எதற்காக நமது பிரதமர் இலங்கைக்கு செல்கிறார்.

மத்திய அரசிடம் இருந்து நீதி பெறுவதற்காக இன்றும் ஆயிரக்கணக்கான மீனவர்களும் பெண்களும் ராமேசுவரத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறார். பலமுறை கடிதமும் எழுதியுள்ளார். ஆனால், கடிதங்கள் அனைத்தும் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் நீங்கள் இலங்கைக்கு போகாமல் இருங்கள், அவர்களை இங்கு வரச் சொல்லி பேச்சுவார்த்தை நடத்துங்கள். ஒரு முறையாவது இந்திய கடற்படை துப்பாக்கியால் சுட்டிருக்கிறதா? இலங்கை படையினருடன் இந்திய படையினர் இணைந்து செயல்படுகின்றனர்.” எனத் தெரிவித்தார்.

வைகோவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

”மூத்த உறுப்பினர் வைகோவின் கோரிக்கைகளை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், இலங்கை கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படையினர் நமது மீனவர்களை துன்புறுத்துவதாக கோபத்தில் அவர் கூறிய கருத்தை ஏற்க முடியாது, அந்த கருத்தை அவர் திரும்பப் பெற வேண்டும்.

2014ஆம் ஆண்டு மோடி பிரதமரானவுடன் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நூற்றுக்கணக்கான மீனவர்களை இந்தியாவுக்கு அழைத்துவந்தார். மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்” என்று பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.