
பெண்களுக்கு ரூ. 2,500 உதவித்தொகை எப்போது வழங்கப்படும் என ஆம் ஆத்மி தலைவர் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார்.
தில்லியில் பாஜக அரசு பெண்களுக்கு ரூ. 2,500 நிதியுதவி வழங்குவதாகக் கொடுத்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்று ஆம் ஆத்மி தலைவர் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார்.
தில்லி முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான அதிஷி இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். அதில், “பாஜக அரசு தில்லியில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 48 லட்சம் பெண்களுக்கு ரூ. 2,500 நிதியுதவியை வழங்குமா அல்லது 1% பேருக்கு மட்டும் நிதியுதவி திட்டத்தை வழங்குமாறு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், ”பாஜக அரசு 12 நாள்களுக்கு முன் ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு இன்னும் செயல்படட் தொடங்கவில்லை. மகளிர் சம்யுத்தி யோஜனா திட்டத்திற்கான பதிவு எப்போதிலிருந்து தொடங்கப்படும்? அந்தத் திட்டத்தில் எப்போது முதல் பெண்களுக்கு பணம் வழங்கப்படும்?” என்றும் முதல்வரிடம் கேள்வி கேட்டுள்ளார்.
பாஜக அரசு ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ரூ. 2,500 நிதியுதவி வழங்கும் திட்டத்திற்காக ரூ. 5,100 கோடி நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கென முதல்வர் ரேகா குப்தா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான மேற்பார்வையில் ஈடுபட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.