தில்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவராக பரத்வாஜ் நியமனம்!

ஆம் ஆத்மி கட்சியின் புதிய தலைவராக பரத்வாஜ் நியமிக்கப்பட்டது தொடர்பாக..
தில்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவராக பரத்வாஜ் நியமனம்!
Published on
Updated on
1 min read

ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவின் புதிய தலைவராக முன்னாள் அமைச்சர் சௌரப் பரத்வாஜையும், பஞ்சாப் மாநிலப் பொறுப்பாளராக மணீஷ் சிசோடியாவையும் நியமித்து கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தலைநகரில் நடந்துமுடிந்த தில்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்த நிலையில், பாஜக அமோக வெற்றி பெற்று பத்தாண்டுகளுக்குப் பிறகு தில்லியில் ஆட்சியை கைபற்றியது. அதேசமயம் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்தில் நடைபெற்ற அரசியல் விவகாரக் குழு(பிஏசி) கூட்டத்தின்போது, கட்சியின் புதிய தலைவராக முன்னாள் அமைச்சர் சௌரவ் பரத்வாஜும், பஞ்சாப் மாநிலப் பொறுப்பாளராக மணீஷ் சிசோடியாவும் நியமித்துள்ளது.

மாற்றங்களை அறிவித்து ஆம் ஆத்மியின் பொதுச் செயலாளர் சந்தீப் பதக் கூறுகையில்,

கட்சி தனது தளத்தை விரிவுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட குஜராத்தின் பொறுப்பை கோபால் ராய்க்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மாநிலங்களவை எம்பியான பதக், ஆம் ஆத்மி கட்சியின் சத்தீஸ்கர் பிரிவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் பங்கஜ் குப்தா கோவாவின் பொறுப்பைக் கவனித்துக்கொள்வார். ஜம்மு-காஷ்மீர் பிரிவின் புதிய தலைவராக மெஹ்ராஜ் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

தில்லியில் பாஜக அளித்த நிறைவேறாத வாக்குறுதிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது, இதில் பெண்களுக்கு மாதாந்திர நிதி உதவி ரூ.2,500 மற்றும் இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்குவதும் அடங்கும் என்று பதக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com