
நாடு முழுவதும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 44% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டின் தரவுகளின்படி 250 கோடி பேர் உள்நாட்டில் சுற்றுலா சென்றுள்ளதாகவும், இதில் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பிச் செல்லும் இடமாக உத்தரப் பிரதேசமும் தமிழ்நாடும் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துப்பூர்வமாக மக்களவையில் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2023ஆம் ஆண்டு தரவுகளின்படி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 250.96 கோடியாக (44%) அதிகரித்துள்ளது. இது 2022-ல் 173.10 கோடியாக இருந்தது.
உள்நாட்டு பயணிகளால் அதிகம் விரும்பிப் பார்க்கப்பட்ட இடமாக உத்தரப் பிரதேச மாநிலம் உள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ள தாஜ்மஹாலை 47.85 கோடி பேர் பார்த்துச்சென்றுள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 28.60 கோடி பேர் சுற்றுலா சென்றுள்ளனர். தொடர்ந்து கர்நாடகத்தில் 28.41 கோடி பயணிகளும் ஆந்திரத்தில் 25.47 கோடி, மகாராஷ்டிரத்தில் 16.13 கோடி நபர்களும் குஜராத்தில் 17.80 கோடி பயணிகளும் சென்றுள்ளனர்.
2023-ல் தலைநகரான தில்லிக்கு 3.94 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
மலைப் பிரதேசங்களில் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து உத்தரகண்ட் முதலிடத்தில் உள்ளது. அங்கு 5.81 உள்நாட்டுப் பயணிகள் சென்றுள்ளனர். ஜம்மு - காஷ்மீருக்கு 2.06 கோடி சுற்றுலாப் பயணிகளும் ஹிமாசலப் பிரதேசத்துக்கு 1.59 கோடி பேரும் சென்றுள்ளனர்.
2023-ல் பாலைவன மாநிலமான ராஜஸ்தானுக்கு 17.09 சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர் என அமைச்சர் அளித்த தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இசை கேட்டு வளர்ந்த கோழிக்கறி உணவு! விலை ரூ. 5,500
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.