காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அஸ்ஸாம் பேரவையில் சுயேச்சை எம்எல்ஏவைத் தாக்க முயற்சி! பேரவை துணைத் தலைவர் மீது தாக்குதல்!

அஸ்ஸாம் சட்டப்பேரவையில் தொடரும் அத்துமீறல் பற்றி...

News image
இடது கையில் கட்டுடன் பேரவைக் கூட்டத்துக்கு வந்த துணைத் தலைவர்.
Updated On :24 மார்ச் 2025, 7:42 am

DIN

அஸ்ஸாம் சட்டப்பேரவை துணைத் தலைவரை காங்கிரஸ் எம்எல்ஏ தாக்கியதை தொடர்ந்து அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை சுயேச்சை உறுப்பினரை பாஜக எம்எல்ஏ தாக்க முயற்சி செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், காங்கிரஸுக்கு எதிராக பாஜகவினரும் இன்று அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

அஸ்ஸாம் சட்டப்பேரவை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் சுயேச்சை உறுப்பினர் அகில் கோகோய் மற்றும் பாஜக மூத்த உறுப்பினர் ரூப்ஜோதி குர்மி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தனது இடத்தைவிட்டு எழுந்த குர்மி, அகில் கோகோய் நோக்கி வேகமாக வந்த நிலையில், சக உறுப்பினர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

எதிர்க்கட்சி உறுப்பினரை பாஜக உறுப்பினர் தாக்க முயற்சித்தற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அஸ்ஸாம் பாஜக தலைவர் திலீப் சைகியாவின் உத்தரவைத் தொடர்ந்து, அகில் கோகோயிடம் தனது செயலுக்கு மன்னிப்புக் கோரினார் குர்மி.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் அத்துமீறி நடந்துகொண்ட பாஜக உறுப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.

அப்போது, சட்டப்பேரவைத் தலைவர் தங்களை பாதுகாக்கத் தவறிவிட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இதனிடையே, இன்றைய சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, சட்டப்பேரவை வளாகத்துக்கு வருகைதந்த துணை பேரவைத் தலைவர் நுமோல் மோமினை நோக்கி வேகமாக ஓடிவந்த காங்கிரஸ் எம்எல்ஏ நூருல் ஹுடா அவரைத் தாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

முதலிதவி எடுத்துக் கொண்ட நுமோல், பேரவைக் கூட்டத்துக்கு கையில் கட்டுடன் வந்தார். காங்கிரஸ் எம்எல்ஏவின் செயலுக்கு முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கண்டனம் தெரிவிதார்.

மேலும், ”பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த தலைவர் பேரவை வளாகத்துக்குள் தாக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு காங்கிரஸ் எம்எல்ஏ மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இடத்தைவிட்டு பாஜக எம்எல்ஏ எழுந்து வந்ததை பெரிதாக்கிய எதிர்க்கட்சியினர் இதற்கு கண்டனம் தெரிவிப்பார்களா?” என்று முதல்வர் கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, பாஜக எம்எல்ஏக்கள் காங்கிரஸ் உறுப்பினருக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.

இதில், சுயேச்சை உறுப்பினரைத் தாக்க முயன்ற பாஜக எம்எல்ஏ ரூப்ஜோதி குர்மி, 2006 ஆம் ஆண்டு முதல் பேரவை உறுப்பினராக இருக்கிறார். கடந்த 2021 இல் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.