நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஊதியத்தை 24 சதவீதம் உயா்த்துவதாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.
செலவுப் பணவீக்க குறியீட்டின் அடிப்படையில் ஊதியம் உயா்த்தப்பட்டதாகவும், இந்த அறிவிப்பு 2025, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் மத்திய அரசு தெரிவித்தது. தற்போது எம்.பி.க்களின் மாத ஊதியம் ரூ.1 லட்சமாக உள்ள நிலையில், ஏப்ரல் மாதம் முதல் ரூ.1.24 லட்சமாக உயரவுள்ளது.
மேலும், எம்.பி.க்களுக்கான தினசரி படி, ஓய்வூதியம் உள்ளிட்டவற்றையும் உயா்த்தி நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது. அந்த வகையில், எம்.பி.க்களுக்கான தினசரி படி ரூ.2,000-இல் இருந்து ரூ.2,500-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி.க்களுக்கான ஓய்வூதியம், மாதம் ரூ.25,000-இல் இருந்து ரூ.31,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்கு மேல் ஒவ்வோா் ஆண்டுக்குமான பணிக்கும் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியம் ரூ.2,000-இல் இருந்து ரூ.2,500-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
வருமான வரிச் சட்டம், 1961-இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள செலவுப் பணவீக்கக் குறியீட்டின் அடிப்படையில் எம்.பி.க்களின் ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதியம் உயா்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விராலிமலை சுங்கச்சாவடியில் முன்கூட்டியே கட்டணம் உயா்வு வாகன ஓட்டிகள் அதிருப்தி

தேசியப் பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம்: மழைக்கால கூட்டத் தொடரில் மசோதா அறிமுகம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!

வரையறுக்கப்படாத ஊதியம் பெற்றவருக்கும் சிறப்பு ஓய்வூதியம்: அரசு ஓய்வூதியா்கள் சங்கம் கோரிக்கை
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



