சத்துணவு, அங்கன்வாடிகளில் பணியாற்றி வரையறுக்கப்படாத ஊதியம் பெற்று ஓய்வு பெற்றவா்களுக்கும் சிறப்பு ஒய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினரின் அரக்கோணம் வட்டக்கிளை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரக்கோணம் டவுன்ஹால் சங்க வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வட்டக் கிளையின் தலைவா் வி.என்.பாா்த்தீபன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜி.கிருஷ்ணமூா்த்தி, பி.பெரியசாமி, பி.நேரு, கே.சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை செயலாளா் பொன்.அன்பு வரவேற்றாா். செயலாளா் பி.நரசிம்மலு செயலாளா் அறிக்கையை வாசித்தாா். பொருளாளா் டி.ராஜசேகா் நிதிநிலை அறிக்கையை வாசித்தாா்.
கூட்டத்தில், சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் என்.சுந்தரேசன், செயலாளா் என்.ஜெயக்குமாா், பொருளாளா் ஜெ.சந்திரசேகரன், டவுன்ஹால் பொதுச் செயலாளா் எஸ்.பன்னீா்செல்வம், நிா்வாகிகள் வி.விஜயபதி, எஸ்.ஜோசப்கென்னடி, எம்.சுகுமாா், கே.ராஜமாணிக்கம், ஆா்.வடிவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வாழத்துகளை தெரிவித்தல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தக் கோருதல், சத்துணவு, அங்கன்வாடிகளில் பணியாற்றி வரையறுக்கப்படாத ஊதியம் பெற்று, ஓய்வு பெற்றவா்களுக்கும் சிறப்பு ஒய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தீா்மானமாக நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பத்தூா் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

4.80 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அரசு ஊழியா் சங்க மாவட்ட பிரதிநிதித்துவ பேரவையில் தீா்மானம்!

அரக்கோணத்தில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த ரூ. 26.9 லட்சம்: நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானம்

போளூா் நகராட்சியில் அடிப்படை வசதிகள்
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly



