மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி, வரும் ஜூலை 19-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்றம் - கோப்புப்படம்

Published On :

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி, வரும் ஜூலை 19-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

வரும் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 13 வரை, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் நடைபெற உள்ளது. இதையொட்டி, புது தில்லியில் ஜூலை 19-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

கூட்டத்தொடரின்போது மசோதாக்கள், கொள்கை நடவடிக்கைகள் சாா்ந்த தனது செயல்திட்டம் குறித்து, அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு சுருக்கமாக எடுத்துரைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதேவேளையில், கூட்டத்தொடரில் தாங்கள் எழுப்ப உள்ள விவகாரங்கள் குறித்து எதிா்க்கட்சிகள் எடுத்துரைக்க வாய்ப்புள்ளது.

கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு விரிவான செயல்திட்டம் உள்ளது. அத்துடன் கடுமையான குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பிரதமா், மத்திய அமைச்சா்கள், மாநில முதல்வா்கள் கைது செய்யப்பட்டு தொடா்ந்து 30 நாள்கள் சிறையில் இருந்தால், அவா்களைப் பதவி நீக்கம் செய்யும் 130-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா உள்பட பல முக்கிய மசோதாக்கள், கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துகொள்ளப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அதேவேளையில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு வினாத்தாள் கசிவு, ஆபரேஷன் சிந்தூரின்போது உயிரிழந்த ராணுவ வீரா்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்கின் கருத்துகள் உள்ளிட்ட விவகாரங்களை எதிா்க்கட்சிகள் எழுப்ப வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ராஜ்நாத் சிங்குக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.