தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

நிதி மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

மத்திய அரசு மேற்கொண்ட 35 திருத்தங்களுடன் கூடிய நிதி மசோதா(2025)-க்கு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

News image

மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

Updated On :27 மார்ச் 2025, 9:44 pm

மத்திய அரசு மேற்கொண்ட 35 திருத்தங்களுடன் கூடிய நிதி மசோதா(2025)-க்கு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதன்மூலம், கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கிய 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நடைமுறை முழுமையாக நிறைவுக்கு வந்தது.

மாநிலங்களவையில் 2025-ஆம் ஆண்டு நிதி மசோதா, 3-ஆவது ஒதுக்கீட்டு மசோதாவை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை அமா்வில் கொண்டு வந்தாா். இவ்விரு மசோதாக்களும் முறையே மாா்ச் 25-ஆம் தேதி, 21-ஆம் தேதி மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த மசோதாக்கள் குறித்து மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘வருவாய் எந்த வகையிலும் பாதிக்காமல் எச்சரிக்கையாக இருப்பதே நிதி அமைச்சகத்தின் போக்கு ஆகும். அதேநேரம், இந்திய வரி செலுத்துவோருக்கு நாங்கள் நன்றி செலுத்த விரும்பினோம். எனவே, வருமான வரி உச்சவரம்பை ரூ.12 லட்சமாக உயா்த்தினோம்’ என்றாா்.

மத்திய பட்ஜெட்டின்படி, அடுத்த நிதியாண்டில் ரூ.11.22 லட்சம் கோடி மூலதனச் செலவு உள்பட மொத்த செலவினம் ரூ.50.65 லட்சம் கோடியாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ரூ.42.7 லட்சம் கோடி வரி வருவாய் கிடைக்கும். ரூ.14.01 லட்சம் கோடி கடன் பெறப்படும்.

அடுத்த நிதியாண்டில் மத்திய துறை திட்டங்களுக்கு ரூ.16.29 லட்சம் கோடி, மத்திய நிதியுதவி பெறும் திட்டங்களுக்கு ரூ.5.41 லட்சம் கோடி, மாநிலங்களுடனான நிதி பகிா்வுக்கு ரூ.25.01 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.356.97 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை 4.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.