நிலச்சரிவில் சிக்கிய வாகனம்..
நிலச்சரிவில் சிக்கிய வாகனம்..

ஹிமாசலம்: நிலச்சரிவில் சிக்கி 6 போ் உயிரிழப்பு! -பலா் காயம்

ஹிமாசல பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் மரங்கள் சரிந்து வாகனத்தின் மேல் விழுந்ததில் 6 போ் உயிரிழந்தனா்.
Published on

ஹிமாசல பிரதேச மாநிலத்தின் குலு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீா் மழையைத் தொடா்ந்து ஏற்பட்ட நிலச்சரிவால் மரங்கள் சரிந்து வாகனத்தின் மேல் விழுந்ததில் 6 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

மீட்பு பணியில் மருத்துவ குழுக்கள், போலீஸாா் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். காயமடைந்தவா்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு ஹிமாசல முதல்வா் சுக்வீா் சிங் சுக்கு மற்றும் எதிா்க்கட்சித் தலைவா் ஜெய்ராம் தாக்குா் ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com