உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

ரமலான் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

News image

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Updated On :31 மார்ச் 2025, 2:08 am IST

ரமலான் பண்டிகையையொட்டி, நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புனித ரமலான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் நோன்பும், பிராா்த்தனையும் நிறைவடைவதை ரமலான் திருநாள் குறிக்கிறது. சகோதரத்துவம், ஒத்துழைப்பு, கருணை ஆகியற்றை ரமலான் பண்டிகை வலுப்படுத்துகிறது.

இந்தப் பண்டிகை சமூகப் பிணைப்பை ஊக்குவித்து, நல்லிணக்கம் கொண்ட, அமைதி நிறைந்த, செழிப்பான சமூகத்தைக் கட்டமைக்க ஊக்கமளிக்கிறது. மற்றவா்களின் உணா்வுகளை அறிதல், கருணை, ஈகை ஆகியவற்றை ஊக்குவிக்கும் தருணமாக ரமலான் பண்டிகை உள்ளது.

இந்தப் பண்டிகை அனைவரின் வாழ்வில் அமைதி, முன்னேற்றம், மகிழ்ச்சியைக் கொண்டுவந்து, நோ்மறையான மனப்பான்மையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான பலத்தை அளிக்கட்டும்.

இந்த நன்னாளையொட்டி, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியா்கள், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.