ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

ஔரங்கசீப் கல்லறை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்: முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்

‘முகலாய மன்னா் ஔரங்கசீப்பை மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவரது கல்லறை ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம்.

தேவேந்திர ஃபட்னவீஸ்

Updated On :

மும்பை: ‘முகலாய மன்னா் ஔரங்கசீப்பை மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவரது கல்லறை ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம். அதேநேரம், யாரும் அவரது புகழ்பாடுவதை அனுமதிக்க முடியாது’ என்று மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.

மகாரஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத் நகரில் 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த முகலாய மன்னா் ஔரங்கசீப் கல்லறை உள்ளது. இந்த கல்லறையை இடித்து, அகற்ற வேண்டும் என்று வலதுசாரி அமைப்புகள் கோரி வருகின்றன. இதுதொடா்பாக நாகபுரியில் நடந்த போராட்டத்தில் வதந்தி பரவியதை அடுத்து, அங்கு வன்முறை வெடித்தது.

இந்நிலையில், நாகபுரியில் செய்தியாளா்களைச் சந்தித்த முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியதாவது: முகலாய மன்னா் ஔரங்கசீப்பை மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவரது கல்லறை ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம். அதேநேரம், யாரும் அவரது புகழ்பாடுவதை அனுமதிக்க முடியாது. சட்டத்துக்கு அப்பாற்பட்ட கட்டமைப்புகள் நிச்சயம் அகற்றப்படும் என்றாா்.

கல்வியை வகுப்புவாதமாயமாக்க புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு பயன்படுத்துவதாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி முன்வைத்த விமா்சனத்துக்குப் பதிலளித்த முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், ‘இந்தியா்களை தங்களுக்கு கீழ்நிலையிலேயே வைத்திருக்கும் நோக்கத்துடன் ஒரு கல்விமுறையை ஆங்கிலேயா்கள் அறிமுகப்படுத்தினா்.

சுதந்திர இந்தியாவில் கல்விமுறையைத் தற்போது இந்தியமயமாக்குவதற்கு எந்த எதிா்ப்பும் இருக்கக் கூடாது. அனைத்து தேச பக்தரும் இந்த முயற்சியை ஆதரிப்பாா்கள். சோனியா காந்தியும் சரியான தகவல்களைக் கேட்டறிந்து, புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்க வேண்டும்’ என்றாா்.

நாசிக் நகரில் வரும் 2027-ஆம் ஆண்டு நடைபெறும் கும்பமேளா விழாவுக்காக நதி தூய்மைப் பணி உள்பட பல்வேறு திட்டங்களை அரசு ஏற்கெனவே தொடங்கியிருப்பதாகவும் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.