3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

செய்தியின் மதிப்பு எதைப் பொறுத்தது? ஃபட்னவீஸ் விளக்கம்!

செய்தியின் மதிப்பு எதைப் பொறுத்தது? என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் விளக்கம் தெரிவித்தது பற்றி...

News image

முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் - படம் - ஏஎன்ஐ

Updated On :1 ஜூன் 2026, 8:31 pm IST

செய்தியின் மதிப்பு அதன் துல்லியத் தன்மையில்தான் உள்ளது. மாறாக அது சமூக ஊடகத்தில் சென்றடைவதைப் பொறுத்ததல்ல என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் திங்கள்கிழமை பேசியுள்ளார்.

பத்திரிகை துறையில் 200 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில், மும்பை இந்தி பத்திரிகையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் பேசியதாவது:

ஒரு செய்தி எந்த அளவுக்கு வைரல் ஆகிறது என்பது கேள்வியல்ல; அது எந்த அளவுக்கு உண்மைத் தன்மையுடன் இருப்பது என்பதுதான் கேள்வி. ஒரு செய்தியின் மதிப்பு அது எந்த அளவுக்கு அதிகமாகப் பரவுகிறது என்பதில் இல்லை. மாறாக, அதன் துல்லித்தன்மையிலும் உண்மைத் தன்மையிலும்தான் உள்ளது.

ஆரம்ப காலக்கட்டத்தில் அச்சு ஊடகம் இருந்தது. அதன்பிறகு, மின்னணு ஊடகம் வந்தது. இன்று சமூக ஊடகங்கள் மூலம் அனைவரும் பத்திரிகையாளர்கள் ஆகிவிட்டனர். மக்கள் தங்களைப் பற்றிய புகைப்படங்களையும் செய்திகளையும் பதிவிடுவதன் மூலம், தங்களுக்கெனத் தாங்களே செய்திகளை உருவாக்குகிறார்கள்.

என்னுடைய புகார் முக்கியமாக டிஜிட்டல் ஊடகங்கள் மீதுதான். இது இதழியலின் மாற்றமே தவிர, அதன் இறுதிக் கட்டம் அல்ல. உண்மையான தங்கம் நெருப்பில் சோதிக்கப்பட்ட பிறகும் பிரகாசிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Summary

The value of news lies in its accuracy, not in the extent of its reach on social media, Maharashtra Chief Minister Devendra Fadnavis stated on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.