நீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்3 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: டிசம்பரில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர டிஎம்ஆா்சி திட்டம்உக்ரைன் - ரஷியா போரில் 49 இந்தியா்கள் உயிரிழப்பு : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்எபோலா: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்சரக்குகள் கையாளுதல்: சென்னை, காமராஜா் துறைமுகங்கள் சாதனை
/

எரிபொருள் நெருக்கடி: வந்தே பாரத் ரயிலில் சென்ற மகாராஷ்டிர முதல்வர்!

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் வந்தே பாரத் ரயிலில் சென்றது குறித்து...

News image

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் - படம் - பிடிஐ

Updated On :23 மே 2026, 10:09 am IST

எரிபொருள் நெருக்கடி காரணமாக, வந்தே பாரத் ரயிலில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ், சீரடிக்கு சனிக்கிழமை சென்றுள்ளார்.

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர்ச்சூழலால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால், அவற்றின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதிக விலை கொடுத்து அவற்றை வாங்கும்போது, இந்தியாவின் அந்நியச் செலாவணி குறையும் நிலையில், எரிபொருள்களை மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆகையால், பல்வேறு முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய வாகன அணிவகுப்பைப் பாதியாகக் குறைத்தும் மின்சார வாகனங்களில் பயணித்தும் பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து, வந்தே பாரத் ரயில்மூலம் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் சீரடிக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், கடந்த பத்து நாள்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை மூன்றாவது முறையாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Due to the fuel crisis, Maharashtra Chief Minister Devendra Fadnavis traveled to Shirdi on Saturday aboard the Vande Bharat Express.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.