எரிபொருளை சேமிக்கும் நோக்கத்தில், ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரி ரயிலில் சென்றார்.
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போா்ச்சூழலால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால், அவற்றின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதிக விலை கொடுத்து அவற்றை வாங்கும்போது, இந்தியாவின் அந்நியச் செலாவணி குறையும் நிலையில், எரிபொருள்களை மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆகையால், பல்வேறு முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய வாகன அணிவகுப்பைப் பாதியாகக் குறைத்தும் மின்சார வாகனங்களில் பயணித்தும் பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கேசர்புரா கிராம பஞ்சாயத்து கட்டடத்தைத் திறந்து வைப்பதற்காக தியா குமாரி ரயிலில் அஜ்மீருக்குப் புறப்படுகிறார். அப்போது அவர் பேசியதாவது:
“பெட்ரோல், டீசலை முடிந்தவரை சேமிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போதைய புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்த முயற்சிக்கு பங்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை ஆகும். முடிந்தவரை, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மிதிவண்டி மற்றும் நடைபயணம் போன்றவற்றைப் பயன்படுத்துங்கள்.
இவை உடல் நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் நல்லது. ஒரு ஆண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்ப்பது போன்ற மற்ற கருத்துகளையும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களையும் நாம் கட்டுப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் நமது நாட்டிற்கும் நமது பொருளாதாரத்திற்கும் நல்லது என்றே நான் உணர்கிறேன்” எனத் தெரிவித்தார்.
நாட்டின் பல மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசலை சேமிப்பதற்காக மெட்ரோ ரயில்களில் பயணிப்பது, வாகனமில்லா தினத்தைக் கடைபிடிப்பது, இணைய வழியில் கூட்டங்களை நடத்துவது மற்றும் அரசு அதிகாரிகளை வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவிடுவது போன்ற முக்கியத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
With the aim of saving fuel, Rajasthan Deputy Chief Minister Diya Kumari traveled by train.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் ரியான் பராக் இல்லை!
முதலிடத்துக்கான போட்டியில் இன்றிரவு மோதும் ராஜஸ்தான் - குஜராத்!

தடுமாறும் ராஜஸ்தான் ராயல்ஸ்; வெற்றியை தொடரும் முனைப்பில் குஜராத் டைட்டன்ஸ்!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; பஞ்சாப் கிங்ஸின் வெற்றியை தடுக்குமா?
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை


