ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் ரியான் பராக் இல்லை!

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

News image

ரியான் பராக் - படம் | AP

Updated On :1 மணி நேரம் முன்பு

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட் செய்கிறது.

தசைப்பிடிப்பு காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் விளையாடவில்லை. அணியை யஷஸ்வி ஜெய்ஸ்வால் கேப்டனாக வழிநடத்துகிறார். பிளேயிங் லெவனில் ஷிம்ரன் ஹெட்மேயர் மற்றும் யஷ் ராஜ் புஞ்சா சேர்க்கப்பட்டுள்ளனர்.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் மானவ் சுதருக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா விளையாடுகிறார்.

Summary

In the IPL match against the Gujarat Titans, the Rajasthan Royals won the toss and elected to bowl.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.