தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

எலான் மஸ்க் பெயரில் போலி இணையதள பக்கங்கள்: காவல் துறை எச்சரிக்கை

டெஸ்லா’ நிறுவன உரிமையாளா் எலான் மஸ்க் ‘கிரிப்டோ கரன்சி’ முதலீடுகளை ஆதரிப்பதாக போலியான காணொலிகள் ...

News image
Updated On :1 மே 2025, 8:11 pm

Din

டெஸ்லா’ நிறுவன உரிமையாளா் எலான் மஸ்க் ‘கிரிப்டோ கரன்சி’ முதலீடுகளை ஆதரிப்பதாக போலியான காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக ‘சைபா் கிரைம்’ காவல்பிரிவு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

டெஸ்லா உரிமையாளரும், உலகின் முன்னணி பணக்காரருமான  எலான் மஸ்க், ‘கிரிப்டோ கரன்சி’ முதலீடுகளை ஆதரிப்பது போன்ற போலியான விளம்பர காணொலிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. எலான் மஸ்க், அவரது தந்தை எரோல் மஸ்க் ஆகியோரின் பேட்டிகளை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் பிற தொழில்நுட்பங்கங்கள் மூலம் தவறாக சித்தரித்து காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக மேற்கொண்ட விசாரணையில் இதுவரை 26 போலி ‘இன்ஸ்டாகிராம்’ கணக்குகளும், 14 போலி இணையதள பக்கங்களும் கண்டறியப்பட்டு, அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, எலான் மஸ்க் எந்தவொரு ‘கிரிப்டோ கரன்சி’ செயலி அல்லது இணையதளத்தையும் ஆதரிக்கவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும். எனவே, போலி இணையதள தகவலை நம்பி, செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.