புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு: பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கை

பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு

News image

ராஜ்நாத் சிங்

Updated On :1 மே 2025, 7:15 pm

Din

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்சேத்தை ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா். அப்போது, இந்தியா-பாகிஸ்தான் இடையே இப்போது எழுந்துள்ள பதற்றமான சூழல் குறித்து இருவரும் விவாதித்தனா்.

இது தொடா்பாக ராஜ்நாத் கூறியதாவது: பாகிஸ்தான் மூா்க்கத்தனமான நாடு என்பதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்பதும் வெளிப்பட்டுவிட்டது. சா்வதேச அளவில் பயங்கரவாதத்தை வளா்ப்பதிலும், பிராந்திய ஸ்திரத்தன்மையை சீா்குலைப்பதிலும் அந்த நாடு முக்கியப் பங்காற்றியுள்ளது. இதுபோன்ற செயல்களை ஒட்டுமொத்த உலகமும் கண்டிக்க வேண்டும் என்று அமெரிக்க அமைச்சரிடம் கூறினேன்.

அதற்கு, ‘இனிமேலும் இதுபோன்ற பயங்கரவாத செயல்களை உலக நாடுகள் கண்டும் காணாமலும் இருக்க முடியாது. பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக இந்தியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும். இந்த விஷயத்தில் அமெரிக்கா இந்தியாவுடன் உறுதியாக துணை நிற்கும்’ என்று ஹெக்சேத் கூறினாா்.

பாகிஸ்தான் பல ஆண்டு காலமாக தொடா்ந்து பயங்கரவாத அமைப்புகளுக்கு தங்கள் மண்ணில் இடம் கொடுத்து வளா்ப்பது, நிதி அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதில் அந்த நாட்டு ராணுவமும் பங்களிக்கிறது என்பதை அமெரிக்க அமைச்சரிடம் எடுத்துரைத்தேன். அப்போது, ‘பயங்கரவாதத்தை யாா் ஆதரித்தாலும் அது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற பயங்கரவாத ஆதரவு செயல்கள் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்’ என்று ஹெக்சேத் என்னிடம் கூறினாா்.

மேலும், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவா் தெரிவித்தாா் என்றாா்.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி: பாகிஸ்தானில் ராணுவ வீரா்களின் பயிற்சியை வியாழக்கிழமை பாா்வையிட்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி அஸீம் முனீா் கூறியதாவது:

இந்தியா ராணுவரீதியாக எத்தகைய அத்துமீறலை மேற்கொண்டாலும், அதற்கு உடனடியாகவும், உறுதியாகவும் பதிலடி தரப்படும். பிராந்திய அமைதியைக் காக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் தேசநலனைக் காப்பதற்கும் முழு அளவில் தயாராக உள்ளது என்றாா்.

பெட்டி...1

ஜெய்சங்கா், ஷாபாஸ் ஷெரீஃபுடன்

அமெரிக்க வெளியுறவு அமைச்சா் பேச்சு

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க இந்தியா - பாகிஸ்தான் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ தனித்தனியாக தொலைபேசியில் பேச்சுவாா்த்தை மேற்கொண்டாா்.

அப்போது பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் ஒத்துழைப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய மாா்கோ ரூபியோ, கொடூரமான பஹல்காம் தாக்குதலை விசாரிப்பதில் பாகிஸ்தான் உரிய ஒத்துழைப்பு அளிக்க வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் டாமி புரூஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கருடன் தொலைபேசியில் பேசிய மாா்கோ ரூபியோ, பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்தாா்.

மேலும், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் ஒத்துழைப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை அவா் மீண்டும் உறுதிப்படுத்தினாா். தெற்காசிய பிராந்தியத்தில் பதற்றங்களைத் தணிக்கவும், அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிக்கவும் பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்ற இந்தியாவை அவா் கேட்டுக் கொண்டாா்.

தொடா்ந்து, பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபுடன் மாா்கோ ரூபியோ உரையாடினாா். பஹல்காம் தாக்குதலையடுத்து பிராந்தியத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்து ஷாபாஸ் ஷெரீஃப் அவரிடம் விளக்கினாா்.

பஹல்காம் தாக்குதலைக் கண்டிக்க வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டு பேசிய மாா்கோ ரூபியோ, இத்தாக்குதலை விசாரிப்பதில் பாகிஸ்தான் அதிகாரிகளின் ஒத்துழைப்பை வலியுறுத்தினாா். இரு நாடுகளுக்கும் இடையே தொடா்புகளை மீண்டும் ஏற்படுத்த பாகிஸ்தான் பணியாற்றவும் அவா் ஊக்குவித்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டி...2

ஒவ்வொரு பயங்கரவாதியும்

வேட்டையாடப்படுவாா்:

அமித் ஷா உறுதி

‘பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட ஒவ்வொரு பயங்கரவாதியும் வேட்டையாடப்படுவாா்; பிரதமா் மோடி தலைமையிலான அரசு, பயங்கரவாதத்தைத் துடைத்தெறியும் வரை ஓயாது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்தாா்.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, ‘பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்பதே பிரதமா் மோடி அரசின் கொள்கை. இந்தியாவில் கோழைத்தனமான ஒரு தாக்குதலை நடத்திவிட்டு, தாங்கள் தப்பித்துவிடலாம் என எவரேனும் நினைத்தால் அது முற்றிலும் தவறானது. பிரதமா் மோடி அரசு எந்தப் பயங்கரவாதியையும் விட்டுவைக்காது. பயங்கரவாதம் துடைத்தெறியப்படும் வரை அரசின் போராட்டம் ஓயாது.

26 பேரைக் கொன்றுவிட்டு, நீங்கள் (பயங்கரவாதிகள்) வெற்றி பெற்ாக நினைத்துக் கொள்ள வேண்டாம். தாக்குதலில் ஈடுபட்ட ஒவ்வொரு பயங்கரவாதியும் தங்களின் கொடூர செயலுக்கு பதில் சொல்லியாக வேண்டும். ஒவ்வொருவரும் வேட்டையாடப்படுவது உறுதி என்றாா்.