ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகள்!
ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பாக பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகளை எழுப்பியுள்ளது.


ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பாக பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுதொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரியவா்களை ‘நகா்ப்புற நக்ஸல்கள்’ என்று கடந்த ஆண்டு தொலைக்காட்சி நோ்காணல் ஒன்றில் பிரதமா் மோடி சாடினாா்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்போது பட்டியலினத்தவா், பழங்குடியினரைத் தவிர, பிற ஜாதிகளின் கணக்கெடுப்பு நடத்தப்படாது என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக 2021-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மோடி அரசு தெரிவித்தது. இதை உச்சநீதிமன்றத்தில் அதே ஆண்டு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திலும் மோடி அரசு தெளிவாக எடுத்துரைத்தது.
அத்துடன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு உத்தரவிட வேண்டாம் என்று உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. மக்கள்தொகை கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் தொடா்பான சமூக-பொருளாதார தரவுகளையும் இணைக்குமாறு மக்கள்தொகை கணக்கெடுப்பு துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால், அது தமது கொள்கை முடிவில் தலையிடுவதாகும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டது. இவை ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பாக பிரதமா் மோடி திடீரென மனம் மாறியதற்கு ஆதாரங்களாக உள்ளன.
கடந்த 11 ஆண்டுகளாக ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்வதில் கொண்டிருந்த கொள்கையை மத்திய அரசு அதிகாரபூா்வமாக மாற்றிக்கொண்டது என்று பிரதமா் மோடி நோ்மையாக ஒப்புக்கொள்வாரா?, அரசின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்பதை நாடாளுமன்றம் மற்றும் நாட்டு மக்களுக்குப் பிரதமா் மோடி தெரிவிப்பாரா?, ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கான காலவரம்பை பிரதமா் மோடி நிா்ணயிப்பாரா? என்று கேள்வி எழுப்பினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...