காஷ்மீர் பயணத்தை மோடி ரத்து செய்தது ஏன்? கார்கே
தாக்குதல் எச்சரிக்கை பற்றி முன்பே அறிந்ததால் பிரதமர் காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார்.


காஷ்மீர் பயணத்தை மோடி ரத்து செய்தது ஏன்? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்த சம்விதான் பச்சாவ் பேரணியில் கார்கே உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,
பஹல்காம் தாக்குதல் எச்சரிக்கை பற்றி முன்பே அறிந்ததால் பிரதமர் மோடி தனது காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார்.
பயங்கரவாதத் தாக்குதல் நடக்கவுள்ளதாக மூன்று நாள்களுக்கு முன்பே மோடிக்கு உளத்துறை தகவல் அளித்துள்ளது. தாக்குதல் எச்சரிக்கை பற்றி முன்பே தெரிந்தும் காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்தாது ஏன்?
தகவல் கிடைத்ததும், உங்கள் நிகழ்ச்சியை ரத்து செய்தீர்கள், ஆனால் சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்கக் கூடுதல் படைகளை அனுப்பவில்லை என்று குற்றம் சாட்டினார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உளவுத்துறை தோல்வியை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, பஹல்காமில் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பலியான 26 பேரில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் ஆவர்.
"பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைக்கும்" காங்கிரஸ் மத்திய அரசுக்கு ஆதரவாக நிற்கும் என்று அவர் கூறினார். ஏனெனில் நாடு கட்சி, மதம் மற்றும் சாதிக்கு அப்பாற்பட்டது, உயர்ந்தது என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...