சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

பாதுகாப்பு ஒத்திகை: தில்லியில் இன்று மின்சாரம் துண்டிப்பு!

போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தில்லியில் இன்று இரவு மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

தில்லி

Updated On :7 மே 2025, 7:09 pm IST

போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தில்லியில் இன்று (மே 7) இரவு மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் தில்லியில் இன்று இரவு 8 மணி முதல் 8.15 மணி வரை 15 நிமிடங்களுக்கு மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் இன்று மாலை நடைபெற்ற போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டு போர் சூழலின்போது எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து மக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

நாடு முழுவதும் இன்று (மே 7) மாலை பெரும்பாலான மாநிலங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு செவ்வாய்க்கிழமை இரவு இந்தியா பதில் தாக்குதலை நடத்திய நிலையில், போர் பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்றது.

தலைநகர் தில்லி, மும்பை, சென்னை, புணே போன்ற பெரு நகரங்களிலும் ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற எல்லையோர மாநிலங்களிலும் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

ஆபரேஷன் சிந்தூர்

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பஹல்காம் சுற்றுலாத் தளத்தின் பைசாரன் பள்ளத்தாக்கில் ஏப். 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 13 நாள்கள் கழித்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் எல்லை மற்றும் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை (மே 6) நள்ளிரவு தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் 4 இலக்குகள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 3 இலக்குகள் மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 தளங்கள் என 9 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.