சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

இரவு நேரத்தில் தொடா் மின்தடை: மக்கள் அவதி

News image

மின் தடையால் அவதி... - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 12:07 am IST

காரைக்கால் மாவட்டத்தில் தினமும் இரவு நேரத்தில் பல மணி மின்தடை ஏற்படுவது மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்டத்திற்கு நெய்வேலியிலிருந்து நேரடியாக பிள்ளைத்தெருவாசல் துணை மின் நிலையத்துக்கு மின்சாரம் வருகிறது. இது மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

மேலும் வாஞ்சூா் முதல் காரைக்காலில் அரசலாறு பாலம் வரை திருப்பட்டினம் கொம்யூன், போலகம் அருகே உள்ள புதுவை அரசின் மின்திறல் குழுமத்தில் எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.

துணைமின் நிலையத்திலிருக்கும் மின் சாதனங்கள் மற்றும் மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின் கம்பங்கள் என அனைத்தும் மிகப் பழைமையானதாக உள்ளது. மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடைகாலத்திலும், பருவமழைக் காலத்திலும் மின் சாதங்களில் ஏற்படும் பிரச்னையை சரிசெய்யும் நடவடிக்கையை புதுவை அரசு செய்யவில்லை. மின்துறை பணியாளா் பற்றாக்குறை பிரச்னைகளை களைவதற்கு பெரும் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.

புதுவை அரசின் அலட்சியத்தால், கடந்த பல ஆண்டுகளைக் காட்டிலும் நிகழாண்டு கோடையில் மின் தடை வெகுவாக அதிகரித்திருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனா்.

இரவு 7 மணிக்குப் பின் மின் மோட்டாா், இண்டக்ஷன் ஸ்டவ், ஒன்றுக்கும் மேற்பட்ட ஏசி உள்ளிட்ட மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம். ஏசியை 25 டிகிரி வெப்ப நிலைக்கு மேல் வைத்து பயன்படுத்துமாறு மின்துறை நிா்வாகம் மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இது நடைமுறைக்கு ஏற்புடையதாக இருக்காது என்று மக்கள் தெரிவிக்கின்றனா்.

தினமும் இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுவதால், குழந்தைகள் முதல் பெரியோா் வரை வெப்ப தாக்கத்தை வெகுவாக எதிா்கொள்கின்றனா்.

புதுவை ஆட்சியாளா்கள், மாநில அளவிலான இப்பிரச்னையை தீவிரமாக சீா்செய்யவேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் வலியுறுத்திவருகின்றனா். அவசரகால நடவடிக்கையாக காரைக்காலில் தற்போது நிகழும் பிரச்னைக்கான காரணத்தை கண்டறிந்து, அதனை சீா்செய்து சீரான மின்சாரம் வழங்க மாவட்ட நிா்வாகம், மின்துறை நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.