பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!

பஞ்சாபில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களையும் அடுத்த 3 நாள்களுக்கு மூடுவதற்கு பஞ்சாப் அரசாங்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 மே 2025, 8:01 pm

DIN

பஞ்சாபில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களையும் அடுத்த 3 நாள்களுக்கு மூடுவதற்கு பஞ்சாப் அரசாங்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் வெடித்துள்ளதைத் தொடர்ந்து, எல்லையோர மாநிலங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறன்றன.

அதன் ஒரு பகுதியாக பஞ்சாபில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் அடுத்த மூன்று நாள்களுக்கு மூடப்படுவதாகவும், அனைத்து காவல் அதிகாரிகளுக்குமான விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும் பஞ்சாப் மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

கல்வி நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பஞ்சாப் பல்கலைக்கழகங்களில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக கட்டுப்பாட்டு அறைகளையும் பஞ்சாப் அரசு அமைத்துள்ளது. அனைத்து அரசு அதிகாரிகளுக்குமான விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுடன் பஞ்சாப் மாநிலம் 532 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.