8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சிந்தூர் தாக்குதல் நடந்த இடம் எப்படியிருக்கிறது? வெளியானது செயற்கைக்கோள் புகைப்படம்

சிந்தூர் தாக்குதல் நடந்த இடம் எப்படியிருக்கிறது என்பது குறித்து செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

சிந்தூர் தாக்குதல் - Dar Yasin

Published On :8 மே 2025, 6:06 pm IST

சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்ட, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தாக் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்களின் மேக்ஸர் தொழில்நுட்பத்தின் மூலம் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகியுள்ளது.

பஹவல்பூர் பயங்கரவாத முகாம்கள், தாக்குதலுக்கு முன்பு, மற்றும் தாக்குதலுக்கு பின்பு என இரண்டு செயற்கைக்கோள் புகைப்படங்களும் வெளியாகியிருப்பதாகவும், இதில் பலத்த சேதம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதல் படத்தில் ஒரு பெரிய கட்டடமும், அதனைச் சுற்றி கட்டமைப்புகளும் இருப்பதும், அடுத்து பெரிய கட்டடத்தின் மேல் தளத்தில் ஓட்டை விழுந்திருப்பதும், அருகிலிருந்து கட்டடங்கள் தரைமட்டமாகியிருப்பதும் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அமைந்திருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய முப்படைகள் இணைந்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின.

இந்த ஆபரேஷன் சிந்தூர் அதிரடித் தாக்குதலை, பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழையாமலேயே, இந்தியா மேற்கொண்ட அதிதுல்லிய தாக்குதலில், பயங்கரவாத முகாம்கள் தரைமட்டமாகியிருக்கின்றன.

நள்ளிரவு 1.05 மணிக்குத் தொடங்கி 1.30 மணி வரை 25 நிமிடங்கள் நீடித்த இந்தத் தாக்குதலில் தரைமட்டமான பயங்கரவாத முகாம்களின் செயற்கைக் கோள் புகைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.