புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

போர்ப் பதற்றம்: அறிவிப்பின்றி தில்லி வந்த சௌதி அமைச்சர்!

அறிவிப்பின்றி சௌதி வெளியுறவுத் துறை இணையமைச்சர் இந்தியா வந்துள்ளதைப் பற்றி...

News image

சௌதி அரேபியாவின் இணையமைச்சர் அதெல் அல்-ஜுபெர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார்.

எக்ஸ்

Updated On :8 மே 2025, 6:49 am

DIN

இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் சௌதி அரேபியாவின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் அவசரமாக தலைநகர் தில்லிக்கு வந்துள்ளார்.

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் “ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்கள் நடத்தியது.

இந்தத் தாக்குதல்களில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் எல்லையிலுள்ள இந்தியப் பகுதிகளின் மீது பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனால், இருநாடுகளுக்கும் இடையில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சௌதி அரேபியாவின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் அதெல் அல்-ஜுபெர் அவசரமாக இன்று (மே 8) தில்லி வந்துள்ளார். முன்னறிவிப்பு ஏதுமின்றி மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணத்தில் அவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசியுள்ளார்.

பாகிஸ்தானுடனான தாக்குதல்களைத் தவிர்த்து இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்காண வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக அவர் இந்தியா வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளப் பதிவில், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை சௌதி அமைச்சருடன் பகிர்ந்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையில் அதிகரித்து வரும் போர்ப் பதற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி நேற்று (மே 7) இரவு தில்லி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.